இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 36 வருடங்களாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வரும்
ALA. வாஹிட் OIC அவர்கள், கல்முனை மைமூனா அமையத்தின் ஏற்பாட்டில் கௌரவிக்கப்பட்டார்.
கல்முனை மைமூனா மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்வு, கலாபீடத்தின் அதிபர் கண்ணியத்திற்குரிய மௌலவி ALM. நாசர் மன்பஈ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அமையத்தின் தலைவர் மூத்த மனநல ஆலோசகர் NM. நௌஸாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

36 வருட காலமாக சமூக ஒழுங்கு, சட்ட அமுலாக்கம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த வாஹிட் OIC அவர்களின் சேவையைப் பாராட்டி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தேசிய சுதந்திர தினம் போன்ற அர்த்தமுள்ள நாளில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவை செய்த ஒரு பொலிஸ் அதிகாரியை கௌரவித்தது அனைவரிடத்திலும் பெரும் பாராட்டையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
