What's Hot

மைமூனா அமையத்தின் நன்றிப் பாராட்டு

Table of Content

🌿 உள்ளம் நிறைந்த நன்றிகள் 🌿

மைமூனா அமையத்தின் நன்றிப் பாராட்டு

மைமூனா சமூக சேவைகள் அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் A.T.M. றாபி (SLAS) அவர்களை கௌரவிப்பு, மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் M.நௌஸாட் அபுபக்கர்(SLEAS) அவர்களை வரவேற்பு, A.L.பஸ்மின் (MRICS) அவர்களை பாராட்டுதல் ஆகிய நிகழ்விற்கு தமது மதிப்புமிக்க பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் மைமூனா அமையம் சார்பாக எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக,

• அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத் உலமா சபை

• ஜம்மியத்துல் உலமா சபையின் கல்முனைக் கிளை

• முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா

• இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ ப் பள்ளிவாசல்

• பதுரியா ஜும்ஆ பள்ளிவாசல்

• ஹாமி ஜும்ஆ பள்ளிவாசல்

• கிரீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித்

• மெடிலேன்ட் வைத்தியசாலை

• கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்கம்

• கல்முனை சமூக மேம்பாட்டு மன்றம்

• கல்முனையான்ஸ் போரம்

• அஸ்டோ அமையம்

• அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத் பேரவைத்

• கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலயம்

• கமு/ அஷ் ஷுஹறா வித்தியாலயம்

ஆகிய நிருவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள்

• திறந்த பல்கலைக்கழக சட்டத்தரணி மாணவர் வட்ட பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள்

ஆகிய அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களின் வருகையும், ஆதரவும், அன்பான பங்களிப்பும் இந்நிகழ்வை சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது.

சமூக ஒற்றுமை, கல்வி, சேவை மற்றும் அபிவிருத்தி எனும் பயணத்தில் எம்முடன் இணைந்து பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் மைமூனா அமையத்தின் அன்பும் நன்றியும் என்றும் உரித்தாகும்.

மைமூனா சமூக சேவைகள் அபிவிருத்தி அமையம் – கல்முனை

சமூக சேவையே எமது பயணம் – சமூக முன்னேற்றமே எமது இலக்கு

Admin

mynmhasanali2002@gmail.com https://kmlac.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

Trending News

Editor's Picks

MLACK

Maimoona Ladies Arabic College kalmunai

Empowering women through knowledge, faith, and excellence in education at Maimoona Ladies Arabic College, Kalmunai.

Popular Categories

Must Read

©2026- All Right Reserved. Designed and Developed by Nanosoft