அல்லாஹ்வின் அருளினாலும், கண்மணி நாயகத்தின் துஆ வறக்கத்தினாலும் Maimoona Awards – 2025 வழங்கும் நிகழ்வு இன்று (07.02.2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
கலாபீடத்தின் அதிபர் கண்ணியத்துக்குரிய மௌலவி AM. நாசர் மன்பஈ அவர்களின் முன்னிலையில், கலாபீடத்தின் தலைவர் மூத்த மனநல ஆலோசகர் NM. நௌஸாத் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நான்கு கட்டங்களாக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருமதி AP. பாத்திமா நஸ்மியா (SEAS, DDE) அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கலாபீடத்தின் ஆலோசகர்களான கண்ணியத்துக்குரிய மௌலவி அல்ஹாஜ் PMA. ஜலீல் பாக்கவி, மேடிலேன்ட் வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் Dr. SMA. அஸீஸ், இப்றா அரிசி ஆலையின் உரிமையாளர் அல்ஹாஜ் SLM. நயீர், அல்பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் MSM. பைசால், அஷ் சுஹறா வித்தியாலய அதிபர் MHRS. மஜிதியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிதிகளாக முஹயித்தீன் மஸ்ஜித் செயலாளர் MHM. கரீம் (BA), அஸ்ட்டோ அமைப்பின் தலைவர் ULM. றியால், சமூக செயற்பாட்டாளர்களான MHM. கலீல் ரஃமான், IL. ஜௌபர், சட்டத்தரணிகளான திருமதி. நிலுபா, திருமதி. வெனாசிர் ஆகியோரும் பங்கேற்றனர்.




மைமூனா அமையத்தின் கௌரவ செயலாளர் MYMY. இம்றான் (LLB), பொருளாளர் SM. நபார், உப செயலாளர் MMM. றகீம், உயர் சபை உறுப்பினர்களான நெனசல் நிறைவேற்றுப் பணிப்பாளர் SM. ஹாஜா, கபீர் மோட்டர்ஸ் உரிமையாளர் SLM. கபீர், ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் புஹாரி உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதற்கு மேலாக ஆலிமாக்கள், கௌரவிப்புகளைப் பெறுவதற்காக வருகை தந்த மாணவ–மாணவிகள், கலாபீட மாணவிகள், பெற்றோர், நலன் விரும்பிகள் மற்றும் ASSDO VOICE ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
