இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கல்முனை மைமூனா அமையத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகுந்த விமர்சையுடனும் சிறப்புடனும் நடைபெற்றன.
இந்த நிகழ்வு, கலாபீடத்தின் அதிபர் கண்ணியத்துக்குரிய மௌலவி ALM. நாசர் மன்பஈ அவர்களின் வழிகாட்டலில், மைமூனா அமையத்தின் தலைவரும் மூத்த மனநல ஆலோசகருமான NM. நௌஸாத் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக தொடர்பாடலுக்கான பொறுப்பதிகாரி (OIC) ALA. வாஹிட் அவர்கள் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக கலாபீடத்தின் ஆலோசகரும் மெடிலேன்ட் வைத்தியசாலையின் நிறைவேற்று பணிப்பாளருமான அல்ஹாஜ் DR. SMA. அஸீஸ், விசேட அதியாக மைமூனா அமையதின் ஆலோசகரும், கல்முனை முஹய்த்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினரும் இப்றா அரிஆலையின் உரிமையாளருமான அல்ஹாஜ் SLM. நயீர் ஆகியோர் சிறப்பித்தனர்.

மேலும் கலாபீடத்தின் விரிவுரையாளர் கண்ணியத்துக்குரிய மௌலவி அல்ஹாஜ் SM. நிம்சாத் மன்பஈ, கிரீன்பீல்ட் முஹயித்தீன் மஸ்ஜிதின் செயலாளர் MHA. கரீம் (BA), கல்முனைக்குடி 03ம் பிரிவின் பிரஜா சக்தியின் தலைவர் M. சித்தீக், கிராம சேவைகள் அதிகாரி கண்ணியத்துக்குரிய மௌலவி M. கியாஸ், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி AUS.ஜெனிதா ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மைமூனா அமையத்தின் கௌரவ செயலாளர் MYMY. இம்றான் (MA, LLB), பொருளாளர் SM. நபார், உப செயலாளர் MMM. றஹீம், கணக்குப் பரிசோதகர் MSA. றஹீம் (ஆசிரியர்) ஆகியோருடன், உயர்சபை உறுப்பினர்களான SM. ஹாஜா (MA), SLM. றபீக், மோட்டர்ஸ் உரிமையாளர் AB. கபீர், ஆலிமாக்கள் மற்றும் மாணவிகளும் இந்நிகழ்வில் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தேசிய ஒற்றுமை, சமூக பொறுப்பு மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அதிகளினால் உரைநிகழ்த்தப்பட்டதுடன், மரக்கன்றும் நடப்பட்டது.
